பல சத்துகள் அடங்கிய ஜவ்வரிசி பல வகையான உணவு பொருட்களை தயாரிக்க பயன்படுகிறது.
ஜவ்வரிசியில் உள்ள சத்துக்கள்
ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின் சி, கால்சியம் மற்றும் மினரல்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன. ஒரு 100 கிராம் ஜவ்வரிசி, 94 கிராம் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் உள்பட 355 கலோரிகள் வரை கொடுக்கிறது.
மருத்துவ பயன்கள்
அரிசியுடன் ஜவ்வரிசியும் சேர்த்துச் சாப்பிட்டால், அது சூடான உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்.
மேலும் அதில் உள்ள கார்போஹைட்ரேட்டும் உடலுக்கு அதிக சத்தைக் கொடுக்கிறது. இந்தியாவின் பாரம்பரியமிக்க உணவாகக் கருதப்படும் ஜவ்வரிசி, சில மூலிகை மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஜவ்வரிசியை பால் அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் சர்க்கரை சேர்த்து, அதைக் குழந்தைக்குக் கொடுத்தால் செரிமானப் பிரச்சனைகள் நீங்கும்.
ஜவ்வரிசியில் முழுக்க முழுக்க எனர்ஜி தரும் சத்துக்கள் அதிகம் உள்ளன. ஜவ்வரிசியில் செய்யப்பட்ட உணவைக் காலையில் எடுத்துக் கொண்டால், அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் நோய் வாய்ப்பட்டவர்களுக்கு ஒரு சரியான மாற்று உணவாக ஜவ்வரிசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment