Breaking

LightBlog

Thursday, 8 December 2016

பெண் குழந்தைகளின் ரியல் ஹீரோ அப்பாக்களே.....


சிறு வயதில் பெண் குழந்தைகளிடம் அப்பாக்கள் செலவிடும் நேரத்தை விட அவள் பருவம் அடைந்த பின் செலவிடும் நேரமானது மிகவும் குறைந்து விடுகிறது.

ஆனால் அப்படி இருப்பது மிகவும் தவறானது. பெண் குழந்தையின் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களை பற்றி நன்றாக கேட்டு தெரிந்துக் கொள்வது அப்பாவின் மிகவும் முக்கியமான கடைமையாகும்.

அப்பா பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள்

அப்பாக்கள் தங்கள் பெண் குழந்தைகளிடம், ஒரு காலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதும், தற்போது பெண்கள் செய்து வருகின்ற சாதனைகள் பற்றியும், கல்வி பற்றியும் நன்றாக எடுத்து சொல்ல வேண்டும். பின் கல்வி பற்றிய அவர்களின் சந்தேகங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

ஆண்கள் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகள், ஆண்களின் குணங்கள், நல்ல குணம் கொண்ட ஆண்களை எப்படி தெரிந்து கொள்வது என்பது பற்றி நன்றாக சொல்லிக் கொடுக்க வேண்டும்.
பெண் குழந்தைகள், அவர்களின் பிற்காலத்தில் இருக்கும் குறிக்கோள்கள் பற்றி நன்றாக கேட்டு தெரிந்துக் கொண்டு அதில் எப்படி வெற்றி அடைவது என்பது பற்றி அதற்கான வழிமுறைகளை திட்டமிட்டு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
ஷாப்பிங் போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது, பொது இடங்களில் எப்படி நடந்துக் கொள்வது என்றும் உடைகள் எப்படி உடுத்திக் கொள்வது என்பது பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

தங்கள் மகளின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்பதையும், உணர்த்தி, அவர்களுக்கு எந்த அளவுக்கு நீங்கள் முக்கியமானவர்கள் என்பதை பற்றியும் உணர்த்தி, அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியை ஏற்படுத்த வேண்டும்.

தன்னுடைய குடும்ப வரலாறு, சிறப்புகள் தங்களின் இளமை காலம் பற்றிய பொழுதுபோக்கு செய்திகள், தான் அடைய நினைத்த குடும்பத்தின் இலக்குகள் மற்றும் தற்போதைய குடும்பத்தின் சூழ்நிலைகள் பற்றி கூற வேண்டும்.

குழந்தைகளை அவர்களின் சிறு வயதிலேயே புத்தகம் படிக்கும் பழக்கங்களை ஏற்படுத்தி, வீட்டிலேயே சிறிய நூலகம் போன்று செய்து அதில் நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்களை வைக்க வேண்டும்.

உலகில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் அதை எப்படி சமாளிப்பதி என்பது பற்றி கூறி அதற்கான தற்பாதுகாப்புக் கலைகளை அவர்களின் சிறு வயதிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும்.

சில வேலைகளுக்கு கூட ஆண்களை எதிர்பார்த்து காத்திருக்க தேவையில்லை என்பதை உணர வைத்து, அதை நம்மாலும் செய்ய முடியும் என்று தன்னம்பிக்கையை ஏற்படுத்தி சிறு சிறு வேலைகளை பற்றி அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog