கல்முனை மாநகரசபையினர் சாய்ந்தமருது கல்முனைக்குடி முஸ்லிம் பிரதேசங்களில் சேகரித்த குப்பைகளை கல்முனையில் தமிழர் செறிந்து வாழும் கல்முனை 2ஆம் பிரிவில் கொட்டியதையடுத்து அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று(09) நண்பகல் இடம்பெற்றள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை 3ஆம் பிரிவிலுள்ள கண்ணகை அம்மனாலயத்திற்கருகேயுள்ள மக்கள் வாழும் பிரதேசத்தில் நேற்றையதினம் மாநகரசபை லொறிகள் குப்பைகளைக் கொட்ட ஆரம்பித்துள்ளது.
அதனை கேள்வியுற்று அவ்விடத்திற்குச்சென்ற சமூகசேவகர் எஸ் சந்திரசேகரம் குப்பைகளை கொட்டவிடாது தடுத்ததுடன் இதுதொடர்பாக கல்முனைப்பொலிஸார் கல்முனைத் தமிழ்ப்பிரிவு பிரதேசசெயலாளர் ,சுகாதார வைத்தியஅதிகாரி ஆகியோருக்கு அறிவித்துள்ளார்
இதன் போது அவ்விடத்திற்குச்சென்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்
இது திட்டமிட்டு மாநகரசபை தமிழ் முஸ்லிம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முனையும் சதியாகவே பார்க்கின்றேன்.
இல்லாவிட்டால் டெங்கு சுத்தப்படுத்தல் என்று சாய்ந்தமருது கல்முனைக்குடி முஸ்லிம் பிரதேசங்களில் சேகரித்த குப்பைகளைக் கொண்டு தமிழர்வாழும் பிரதேசத்தில் கொட்டலாமா?
ஒரு பக்கம் டெங்குவை நீக்கி மற்றப்பக்கம் டெங்குவை ஏற்படுத்துவதா? இது தானா மாநகரசபையின் நீதியான நிருவாகம்? இதற்குத் தானா புதிய கல்முனை நகர அபிவிருத்தித்திட்டத்திற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்?இன விரோத செயற்பாடுகளையும் இனவிரிசலையும் ஏற்படுத்த முனைகின்றார்கள்.
இவ்வாறான செயலை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது என்றார்மேலும் அவர் பொதுமக்களோடு கலந்துரையாடியதைத் தொடர்ந்து கல்முனை மாநகர சபை ஆணையாளரோடும் கதைத்துள்ளார். இந்தவிடயம் சம்பந்தமாக கிழக்கு மாகாண கௌரவ முதலமைச்சர் அவர்களது கவனத்திற்கு கொண்டு வந்து இதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் மக்களிடம் உறுதியளித்தார்.
By-அதிரடி (மட்டுநகரான்)
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment