Breaking

LightBlog

Monday, 5 December 2016

வாய் புண்ணைக் குணப்படுத்தும் கோவைக்காய்..


கோவைக்காய் புதரில் வளரக் கூடிய ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. இந்தக் கொடியின் காய்கள், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்ற அனைத்துமே அதிக மருத்துவ குணம் உடையது.

கோவைக்காயின் முழுத் தாவரமும் அதிக குளிர்ச்சித் தன்மை கொண்டது. இந்த தாவரத்தின் மலர்கள் வெள்ளை நிறமாகவும், பழமானது, ரத்த சிவப்பு நிறத்தில் சதைப்பற்றுடன் காணப்படுகிறது.

கோவைக்காயில், சாம்பார், கூட்டு, பொறியல் போன்றவை செய்து உணவோடு சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

எனவே கோவைக்காயை தினமும் நம் உணவில் சேர்த்துக் கொண்டால் ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.

கோவைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கோவைக்காய் சாறு, நீரிழிவு நோய் மருத்துவத்தில் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கோவைக்காய் நல்ல பலனை கொடுக்கிறது. இதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.

கோவைக்காயை, பச்சடி செய்து தொடர்ந்து இரண்டு நாட்கள் மட்டும் பகல் உணவில் சேர்த்து சாப்பிட்டால், வாய்ப்புண் குணமாகிவிடும். மேலும் இதை பச்சையாக மென்று கீழே துப்பி விடலாம். அல்லது ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் சேர்த்து அரைத்து குடித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

கோவைக்காயின் இலை மற்றும் தண்டுகள், கபத்தை வெளியேற்றி, வலியைக் குறைக்கும். மேலும் இதனுடைய இலை மற்றும் தண்டை கஷாயம் வைத்து சாப்பிட்டால் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல பலன் தரும் சிறந்த மருந்தாக உள்ளது.

கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றை தீர்க்கும் நல்ல மருந்தாகும். மேலும் கோவைகாயின் இலைச் சாறு, பித்தம், மூல நோய் ஆகியவ
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog