Dr. Rizwan ஆகிய நான் முகநூல் நண்பர்களுக்கு ஒரு முக்கியமான விடயத்தைப் பகிரலாம் என்று நினைக்கின்றேன்.
நான் பிறந்தது சம்மாந்துறை வைத்தியசாலையிலே ..
நான் முதல்கட்டமாக சேவையாற்றுவதும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையிலே..
மாஷாஅல்லாஹ் .
எனது தொழிலில் குறுகிய காலத்துக்குள் திருப்தியைக் (Satisfaction) கண்டுகொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்.
நான் பிறந்த வைத்தியசாலையில் என்னால் அதன் பெயர் எழும்புமளவிற்கு சேவையாற்ற வழிவகுத்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
நான் இங்கு குறிப்பிடவிருக்கும் முக்கியமான விடயம் என்னவென்றால் நான் அரசியல் நோக்கங்களைக் கொண்டே மருத்துவ முகாம்கள் நடாத்துவதாக சில ஹலால் மாமிசம் திண்ணிகள் முகநூல்களில் தனது கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.
மேலும் அவர்கள் எனது Private practice க்கான நோயாளிகளைக் கூட்டுவதற்கான முயற்சி என்றும் புலம்புகிறார்கள். இது என் முயற்சியை மழுங்கடிக்கும் செயற்பாடுகளாக அவர்கள் எண்ணினால் நிச்சயம் இதை மடமை என்றுதான் கூறவேண்டும். அல்லாஹ் எனக்கு விதித்த ரிஸ்க்கை அவன் எவ்வாறானாலும் தருவான். அந்த நம்பிக்கை எனக்குண்டு..
எனது தூய எண்ணத்தில் மாசைக்கலக்க முயற்சிக்காதே! தற்போது மக்கள் விழிப்பாக உள்ளார்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. எனக்கு அவ்வாறு ஒரு எண்ணமிருந்தால் சம்மாந்துறையில் அல்லவா மருத்துவ முகாம்களை நடாத்த வேண்டும்.
" தூரத்து ஏழைகள் எனது நேரத்துக்கு வரமாட்டார்கள்"
நமதூரில் இவ்வாறான விமர்சிகளினால் நல்ல வேலை செய்யவிரும்பும் எத்தனையோ நண்பர்கள் சமூகத்தில் இலைமறை கனிகளாகக் காணப்படுகின்றார்கள்.
நான் Reessa Str ஸதகா அமைப்பாகிய ஒரு சமூக சேவை அமைப்பைக் கொண்டு மருத்துவ முகாம்களை நடாத்தி வருகின்றேன். பெரும்பாலும் வைத்தியசாலைகளை கொண்டிராத அல்லது தூரம் அதிகமாகவுள்ள இடங்களையே குறிக்கோளாக வைத்து என்னால் சம்மாந்துறை சமூகத்து எதாவது செய்ய வேண்டும் அதுவும் அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டும் என்றே செய்து வருகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.
சம்மாந்துறையில் அரசியல் செய்வதற்கு அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் அரசியலைப்பார்த்துக் கொள்வார்கள். அந்த துறையின் எனது அறிவு பூச்சியம்.
அல்லாஹ் எனக்கருளிய அருட்கொடையைக் கொண்டு நான் ஏதோ விதத்தில் உதவிகளைச் செய்கின்றேன். ஏனைய நண்பர்களும் அவர்களால் ஆன சேவைகளை சமூகத்துக்குச் செய்வதற்கு நாம் துணையாக இருக்க வேண்டும்.
நான் இங்கு வெளிப்படையாகக் குறிப்பிடுவது என்னவென்றால் எனக்கு அரசியல் நோக்கம் எதுவும் இல்லை.Reessa Str ஸதகா அமைப்பில் இருக்கும் சகோதரர்கள் யாருக்கும் அரசியல் நோக்கமில்லை.
உம்மால் முடியாவிட்டால் விமர்சிக்காமல், சாத்தியமற்ற எதிர்வு கூறலைக் கூறாமல் சரியான பாதையில் செல்பவர்களுக்கு இடைஞ்சலாக இருக்காதே...
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment