Breaking

LightBlog

Monday, 5 December 2016

டிசம்பர் 6 ஐ ஜெயலலிதாவின் மரணச்செய்தியை அறிவிக்க மோடி திட்டம்....இன்று நள்ளிரவில் மரணச்செய்தி


By-Abdul Wahab
டிசம்பர் 6 இந்திய முஸ்லிம்கள் ஒவ்வொருவரின் இதயப்பூர்வமான கண்ணீர் தினம் .

தங்கள் இறைவனின் ஆலயத்தை அயோக்கியர்கள் அயோத்தியில் தகர்த்து தரை மட்டமாக்கிய தினம் .

வருடங்கள் பல கடந்தாலும் வட நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் பாசிச பயங்கரவாத பாஜக ஓரளவுக்கு வேரூன்றி இருந்த காரணத்தால் இஸ்லாமிய மக்களை பயமுறுத்தி அச்சுறுத்தி அடக்கி வைத்திருக்கும் காரணத்தினால் பாபர் மஸ்ஜித் இடிப்பு தின எதிர்ப்பு சிறுக சிறுக நீர்த்துப்போனாலும் ...

தமிழக மண்ணில் நீர்த்துப்போகச் செய்யமுடியவில்லை .காரணம் இங்கு தமிழக மண்ணில் ஏகத்துவச்சிந்தனை பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது .

இந்த சிந்தனையில் வார்க்கப்பட்ட மக்கள் ஆண்டுகள் பல கடந்தாலும் வீரியம் குறையாமல் டிசம்பர் 6 தோறும் பல இலட்சக்கணக்கான ஆண்கள் பெண்கள் ரோட்டில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி இந்த உலகம் அழியும் நாள் வரை எப்போதெல்லாம் டிசம்பர் 6 வருமோ அதுவரை எங்கள் இறையில்ல இடிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடரும் என இந்திய அரசின் கவனத்தை விட்டு டிசம்பர் 6 திசை திரும்பாமல் பார்த்து பாதுகாத்து வருகிறோம் .

இந்த நிலையில் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்த எதிர்ப்பையும் தமிழகத்தில் நீர்த்துப்போகச் செய்ய இந்து முண்ணனி போன்ற பன்னாடைகள் ஒரு சிலர் ராமர் கோவில் பாதுகாப்பு தினம் என்ற பெயரில் நமக்கு எதிராக நடத்தி தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த நினைத்த போதெல்லாம் தனது நிர்வாக திறத்தால் இரும்புக்கரம் கொண்டு தடுத்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா ...

இன்று ...
அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சூழலில் அவர் நலம் பெற்று திரும்ப வேண்டும் என உள்ளார்ந்த அன்புடன் அதிகமாக இறைவனிடம் பிரார்த்தனை செய்பவர்கள் தமிழக இஸ்லாமிய மக்கள்தான் ..காரணம் தமிழக இஸ்லாமிய மக்களுக்கு தனது நிர்வாக திறத்தால் ஓரளவிற்கு பாதுகாப்பாக அதாவது கருணாநிதியை விட கூடுதலாக இருந்ததும் ஒரு காரணம் .

இப்பேர்ப்பட்ட இக்கட்டான சூழலில் நேற்று டிசம்பர் 4 முதல்வர் உடல்நலம் குறித்து சந்தேகம் ஏற்படும் வகையில் ஒருசில நிகழ்வுகள் அரங்கேறியது .இருந்தும் இதுவரை எந்த செய்தியும் வெளிவர வில்லை .நமது அவா அவர் பூரண குணமடைந்து மீண்டும் தமிழக முதல்வராக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் அதுவும் தற்போதைய சூழலில் அவரைப்போல ஒரு நிர்வாக திறன் மிக்க ஒரு ஆட்சியாளர் கண்டிப்பாக தமிழகத்திற்கு தேவை என்பதுதான் ஒவ்வொரு இஸ்லாமியனின் எதிர்பார்ப்பு என்றால் அது மிகையல்ல .
ஆனால் நாளை டிசம்பர் 6 .

இந்த நாள் ..?
இந்த டிசம்பர் 6 ஐ பாசிச மோடி திட்டமிட்டு பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டிருக்கலாம் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது .

இந்த நாளில் ஏதாவது நாம் விரும்பாத ஒரு நிகழ்வை அது நடந்து முடிந்திருக்கலாம் அல்லது நிகழலாம் அல்லது நிகழ ஏற்பாடு செய்யலாமோ என்ற அச்ச உணர்வு ஏற்படுகிறது .

காரணம் டிசம்பர் 6 அன்று ஏதாவது அறிவிப்பு வெளியிடப்பட்டு அந்த நாளை ( இறைவன் பாதுகாப்பானாக ) நினைவு நாளாக அதுவும் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற ஆளுமை நிறைந்த ஒருவரின் நினைவு நாள் என்பது இந்தியா போன்ற நாடுகளில் சாதாரண நிகழ்வல்ல அது வருடாவருடம் மிக தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு நினைவு கூறப்படும் .

தமிழகத்தில் டிசம்பர் 6 என்றால் அது முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் என மாற்றம் செய்யப்பட்டால் அன்றைய தினம் பாபர் மஸ்ஜித் தின ஆர்ப்பாட்டம் என்பது எதிர்ப்பு தெரிவிக்க உகந்த நாளாக இருக்காது நடத்தவும் முடியாதே ...

தமிழகத்தில் ஜெயலலிதா நினைவு தினத்தன்று காவிகள் ராமர் கோவில் பாதுகாப்பு தினம் கொண்டாட சட்ட ரீதியான அந்தஸ்து கிடைத்து விடும் .

தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற ஜெயலலிதா உபயத்தில் டிசம்பர் 6 இந்துக்களின் புனித நாளாக மாறும் .

இது போன்ற யுக்திகள்தான் ஆரிய பார்ப்பணீயசிந்தனை .
தமிழக பகுத்தறிவுவாதிகளின் சிந்தனைகள் நீர்த்துப்போன நிலையில் பார்ப்பணீய சிந்தனை சற்று வலுப்பெற்று வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை இது நிறைவேறும் பட்சத்தில் தமிழகம் ஐம்பதாண்டுகள் பின் தள்ளப்படும் என்பது மட்டுமே உண்மை .


எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog