(எம்.ஜே.எம்.சஜீத்)
கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டத்தினூடாக அட்டாளைச்சேனை- 03 மார்கட் வீதி வடிகான் நிர்மாண வேலைகள் முறைகேடாக மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அவ்விடத்துக்கு கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை இன்று (7) திடீர் விஜயம் மேற்கொண்டு வடிகான் நிர்மாணப்பனிகளைப் பார்வையிட்டார்.
இதன் போது அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ரீ. அதிசயராஜ் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
குறித்த வீதியில் நிர்மாணிக்கப்படும் வடிகான் முறைகேடாக நிர்மாணிக்கப்படுவதாகவும், வடிகான் செய்வதற்காக வெட்டப்பட்ட குழியினுள் நீர் தேங்கி நிற்கும் வேளையில் நிர்மாண வேலைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதன் போது பொதுமக்கள் குற்றம் சுமத்தினர்.
இவ்விடயமாக கவனத்திற்கொண்ட கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும்,அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை குழியினுள் நீர் நிரம்பிக் காணப்படும் நிலையில் மேற்கொள்ளப்படும் இவ்வடிகான் நிர்மான வேலைகளை உடனடியாக நிறுத்துமாறும், இது தொடர்பில் சிரேஷ்ட பொறியியலாளர்களின் ஆலோசனைகளைப் பெற்று சிறந்த முறையில் மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்தார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment