மலம் கழிக்கும் போது, மலப்புழையில் எரிச்சல் ஏற்படுவது என்பது சாதாரணமான பிரச்சனை இல்லை.
நம் உடலின் உட்பகுதியில் உள்ள மலக்குடல் அல்லது மலப்புழையின் பாதையில் ஏதேனும் தொற்றுகள், காயங்கள் மற்றும் இரத்தக் கசிவுகள் ஏற்பட்டிருந்தால், மலம் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறது.
இந்த வகையான பிரச்சனைகளை சாதரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை சென்று பார்த்து அதற்கான பரிசோதனைகளை அவசியமாக செய்துக் கொள்ள வேண்டும்.
மலப்புழையில் எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள்
நம் உணவில் அதிக காரமான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், மலப்புழையில் சிறு பிளவுகள் ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில், ரத்தக்கசிவு மற்றும் எரிச்சலுடன் கூடிய மலம் வெளியேற்றப்படுகிறது.
ஹெர்பீஸ் தொற்றுகள், நோய்த் தொற்றுகள், மோசமான சுகாதாரம் மற்றும் அந்த இடத்தில் ஏற்படும் தொடர்ச்சியான அரிப்புகள் போன்றவற்றின் காரணமாக மலப்புழை உள்ள சருமத்தில் வெடிப்பு ஏற்படுகிறது. இதனால் மலம் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலி ஏற்படுகிறது.
பைல்ஸ் பிரச்சனையால் ஏற்படும் பாதிப்பு, நரம்புகள் வீங்கி இருத்தல், மற்றும் அந்த இடத்தில் அதிக சதை வளர்ச்சிக் காரணமாக, மலம் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலிகள் ஏற்படுகிறது.
புரோக்டால்ஜியா ஃபுகாக்ஸ் (Proctalgia Fugax) என்ற நோயினால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், மலம் கழிக்கும் போது, எரிச்சல் மற்றும் வலியை உணரக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படுகிறது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment