Breaking

LightBlog

Monday, 28 November 2016

இனவாதத்தை தூண்டாத வகையில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுவது அவசியம் - பிரதமர்.


இனவாதத்தை தூண்டாதவகையில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுவது அவசியம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக சில ஊடக நிறுவனங்கள் பல்வேறுபட்ட செய்திகளை வெளியிட்ட போதிலும் அந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ ஊடகவியலாளர்களுக்கு எதிராகவோ எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் எட்டாம் நாள் விவாதம் இன்று காலை பாராளுமன்றத்தில் ஆரம்பமானது.

பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகம், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகிய அமைச்சுக்களுக்கான வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதம் இன்று ஆரம்பமானது. பிரதமர் இங்கு உரையாற்றுகையில் இந்தவிடயத்தை குறிப்பிட்டார்.

இதேவேளை இன்று காலை பாராளுமன்ற அலுவல்கள் ஆரம்பமான போது விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளைத் தளபதி கே.எல்.எம்.சரத்சந்திர கைது செய்யப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளிக்கையில்,

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பணியாற்றிய எவரையும் சிறையில் அடைப்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மாட்டாது என்று அவர் தெரிவித்தார். மூன்று தசாப்தங்களாக நிலவிய பயங்கரவாதத்தை ஒழிக்க இராணுவத்திற்கு தலைமைத்துவம் வழங்கிய சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்படும்போது, கடந்த அரசாங்கம் மௌனம் சாதித்ததையும் இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டினார்.
by-tamil.news

எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog