Breaking

LightBlog

Monday, 28 November 2016

பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு சோளம் விதைகள் வழங்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் சோளம் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு விவசாயிக்கும் 5 கிலோகிராம் சோளம் விதைகள் வழங்கப்பட்டுள்ளது.

கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் டேர்பா மண்டபத்தில் வைத்து விவசாயிகளுக்கு சோளம் விதைகள் வழங்கப்பட்டது.

கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நிதியொதுக்கீட்டில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரை, மற்றும் ஓட்டமாவடி, கிரான், ஏறாவூர் பற்று, மண்முனை வடக்கு, களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 261 விவசாயிகளுக்கு இந்த சோளம் விதைகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் மண்முனை 

வடக்குப் பிரதேச செயலாளர் ஏ.தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் இ.கோகுலதாசன், முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான எஸ்.கணேசமூர்த்தி உட்பட அதிகாரிகள் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

by-tamil.news
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog