Breaking

LightBlog

Wednesday, 23 November 2016

தெற்கில் எரிந்து கொண்டிருக்கும் பேரினவாதத்திற்கு பெற்றோல் ஊற்றும்- மன்சூர் எம்பி.


by-எம்.சி. அன்சார்

உண்மைக்கு புறம்பான தகவல்களை பாராளுமன்றத்தில் முன்வைத்து இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக தெற்கில் எரிந்து கொண்டிருக்கும் பேரினவாதத்திற்கு பெற்றோல் ஊற்றும் வேலையையே அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ செய்துள்ளமைமயானது  முஸ்லிம் மக்கள் எல்லோரும் தீவிரவாதிகளாக பெரும்பான்மை

சமூகத்தினரால்  பார்க்கச் செய்கின்ற விடயமாகும்.  ஆனால், எமது சமூகத்திற்காக பேசுகின்ற தைரியமும், போராடும் குணமும் எங்களை விட்டு இன்னும் போகவில்லை. என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

 அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை குறித்து நேற்று (22) விடுத்துள்ள ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



மேலும் அவ்வறிக்கையிலேயே அவர் தெரிவிக்கையிலே –

இனவாதத்தை விதைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்துதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிடும் அம்சத்தை ஆதரிக்கும் நாங்கள் தீவிரவாத செயற்பாடுகளுடன் இஸ்லாமிய அமைப்புக்களையும், கல்விக்கூடங்களையும் முடிச்சுப் போட்டு கருத்துத் தெரிவித்தமையானது உண்மைக்குப் புறம்பானதாகும். வன்மையாக கண்டிக்கும் விடயமாகும்.

இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் அனைத்து இன மக்களுடன் ஒற்றுமையாக விரும்புவார்கள். இந்நாட்டின் வளர்ச்சியிலும், அபிவிருத்தியிலும், சமாதான சகவாழ்விலும் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பரியது என்பதனை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது.

இலங்கை முஸ்லிம்களோடு சிரியாவில் செயற்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு முடிச்சு போடும் அமைச்சரின் எவ்வித ஆதாரமுமில்லாத கருத்தானது தெற்கின் சிங்கள இனவாத நெருப்புக்கு பெற்றோல் ஊற்றுவதாக அமைவதோடு, நாட்டின் சமாதானத்தையும், நல்லிணக்கத்தினையும் சீர்குலைக்கும் ஒரு செயலாகும்.

எனவே, இவ்வாறான ஆபத்து இருக்கின்ற சூழலில் எது எவ்வாறான போதும் முஸ்லிம்கள் இச்சந்தர்ப்பத்தில் மிக நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog