"நாம் கற்றது மை யளவு நாம் கற்க வேண்டியது கடலளவு"
என்பது போல வைத்தியசாலைகளில் சேவை செய்யும் வைத்தியர்கள் தாதியர்கள் மேலும் அனைத்து சேவகர்களும் தமது அறிவை விருத்தி செய்வதற்கான இலகுவான வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பது இன்றியமையாததொன்று. ஏனென்றால் வேலைப்பழுகாரணமாக நூலகங்களுக்குச் செல்ல முடியாமை.
Dr. AWM Sameem Consultant Surgeon ன் கடும் முயற்சியின் விளைவாக ஆசியா பவுண்டேசனினால் தரமான தற்காலத்துக்கு அத்தியவசியமான பெறுமதியான ஒரு தொகை மருத்துவ நூல்கள் இன்று புதன் கிழமை சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அட்தியச்சகர் Dr. YBM Abdul Azeez, சத்திரசிகிச்சை நிபுணர் Dr.AWM. Sameem அவர்களிடமும் ஆசியா பவுண்டேசன் நிபுணத்துவ முகாமையாளர் MIM வலீத் அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.
மாஷாஅல்லாஹ்.
மேலும் பல தேவையான நூல்களை பெற்றுத்தர இருப்பதாகவும் ஆசியா பவுண்டேசன் நிபுணத்துவ முகாமையாளர் MIM வலீத் கூறியுள்ளார்கள். இன்ஷா அல்லாஹ்.
எமது வைத்திய அத்தியட்சகர் Dr. YBM Abdul Azeez அவர்கள் ஆசியா பவுண்டேசனின் அளப்பெரிய சேவைக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
எமது சத்திரசிகிச்சை நிபுணர் Dr. AWM Sameem அவர்கள் கூறுகையில் இவ்வகையான நூல்கள் வைத்தியர்களுக்கும் தாதியர்ரளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு ஆசியா பவுண்டேசனுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
SMA BH Sammanthurai யும் தனது நன்றிகளை ஆசியா பவுண்டேசனுக்கு தெரிவிக்கின்றது.
by-Sma Base Hospital Sammanthurai
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment