தென்னாபிரிக்காவில் கறுப்பினத்தவரை 2 வெள்ளை ஆபிரிக்கர்கள் வலுக்கட்டாயமாக உயிரோடு சவப்பெட்டியில் அடைத்து மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனவெறி ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெற்ற பிறகும் கூட தென்னாபிரிக்காவில் நிறவெறி கலவரங்கள் இன்றளவும் அரங்கேறி வருகின்றன.
தென்னாபிரிக்காவில் இனவெறியால் கறுப்பின மக்கள் படும் துயரங்கள் உலகம் அறிந்தது. இந்நிலையில் அங்கு தற்போது கறுப்பின ஆபிரிக்கர் ஒருவரை உயிருடன் வலுக்கட்டாயமாக சவப்பெட்டியில் அடைக்கும் வெள்ளை ஆபிரிக்கர்கள் அவரை பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவதாகவும், சவப்பெட்டிக்குள் பாம்பை விட்டுவதாகவும் மிரட்டுகின்றனர்.
இது தொடர்பில் சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படம் மற்றும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட்ட வெள்ளை ஆபிரிக்கர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன.
இதனிடையே பாதிக்கப்பட்ட விக்டர் மிலாட்ஸ்வா என்ற கறுப்பின ஆபிரிக்கர் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2 பேரையும் சிறையிலடைக்க ஆணையிட்டதோடு மறு விசாரணையை எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment