Breaking

LightBlog

Friday, 11 November 2016

வாகனங்களின் விலை அதிகரிப்பு...!


ஆயிரத்துக்கும் குறைவான எஞ்ஜின் திறன் கொள்ளளவு கொண்ட சிறிய ரக கார்கள், 2 இலட்சம் ‌ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக, வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1,800 முதல் 2,000 எஞ்ஜின் திறன் கொள்ளளவு கொண்ட வாகனங்கள் 9 இலட்சம் ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய மேற்படி இறக்குமதியாளர்கள், இது, ஹைப்ரிட் வாகனங்களில் தாக்கம் செலுத்தப்போவதில்லை என்றனர்.

அனைத்துவிதமான வான்களும், இரண்டு இலட்சம் ரூபாயினால் குறைவடையவுள்ளது. இந்த விலைக் குறைப்பானது, பெட்ரோல் மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு மாத்திர​மே அமுலானதாகும். டீசலில் இயங்கும் வான்களுக்கு, இந்த விலைக்குறைப்பு இல்லை.

இதேவேளை, க்ரூ கெப் ரக வாகனங்களின் விலைகளும் குறைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக, வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog