இளைஞர் ஒருவர், உறங்கிக்கொண்டிருந்த தனது காதலியின் உடலில் உயிருள்ள இரு பெரிய பாம்புகள் எறிந்து அந்த யுவதிக்குப் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளார்.
டெரெக் டெஸோ எனும் இந்த இளைஞர், வேடிக்கைகளில் ஈடுபட்டு அதை வீடியோவில் பதிவுசெய்து வெளியிடுபவர். அண்மையில் அவர் தனது காதலியை வியப்புக்குள்ளாக்குவதற்காக அவரின் மீது பாம்புகளை எறியும் விபரீதத்தை மேற்கொண்டார்.
இதன்போது பதிவுசெய்யப்பட்ட காட்சிகள் இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து, இந்த விபரீத நடவடிக்கையில் ஈடுபட்டார்.
தனது காதலி உறங்கிக் கொண்டிருந்தபோது தனது நண்பி, நண்பர்கள் சகிதம் அறைக்குள் புகுந்த டெரெக் டெஸோ, பெட்டியொன்றில் அடைக்கப்பட்டிருந்த இரு பாம்புகளை காதலியின் உடலில் கொட்டினார்.
பின்னர், காதலியிடம் அன்பாக பேசி அவரை உறக்கத்திலிருந்து எழுப்பிய டெரெக், அவரின் உடலில் பாம்புகள் ஊர்ந்து கொண்டிருக்கும் விடயத்தை தெரிவித்தபோது, அந்த யுவதி அச்சத்தினால் வீறிட்டு அழுதார்.
ஆனால், டெரெக்கும் அவரின் நண்பர்களும் சிரித்துக் கொண்டிருக்கும் காட்சி அவ்வீடியோவில் பதிவாகியுள்ளது. பின்னர் பாம்புகளைக் கையாளும் நபர் ஒருவர் மேற்படி பாம்புகளை அப்புறப்படுத்தினார்.
அதன்பின்னரும் அழுது குழறிய மேற்படி யுவதி, டெரெக்கை திட்டினார். இந்த வீடியோவை இணையத்தில் சுமார் 8 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். உலகி லேயே மிக மோசமான காதலன் இவர் என டெரெக் டெஸோவை சிலர் விமர் சித்துள்ளனர்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment