Breaking

LightBlog

Wednesday, 23 November 2016

சம்மாந்துறை அல் - மர்ஜான் மகா வித்தியாலயத்தினை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தல்

சம்மாந்துறை முஸ்லிம் பெண்களின் கல்வியில் அக்கறை கொண்ட சம்மாந்துறை தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளர் முஹம்மட் ஏ. ஹஸனலி அவர்கள் சம்மாந்துறை அல் - மர்ஜான் மகா வித்தியாலத்தினை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் கோரிக்கையை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களிடம் கையளித்தார். இருப்பினும் இப்பாடசாலையானது மாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் இருப்பதனால் மாகாண சபையின் அனுமதி பெறுவதற்கான கோரிக்கையை மாகாணச் செயலாளரிடம் திருகோணமலையில் உள்ள அவருடைய காரியாலத்தில் 2016-11-22 (நேற்று) ஆம் திகதி ஹஸனலி அவர்களினால் கையளிக்கப்பட்டது.

சம்மாந்துறை கல்வி வலயத்தில் 71 பாடசாலை காணப்படுவதோடு ஒரேயொரு தேசிய பாடசாலை மட்டுமே உள்ளது. இவ் வலயத்தில் 25205 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.

1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அல் - மர்ஜான் பாடசாலையில் சுமார் 2000 மாணவிகள் கல்வி பயிலுகின்றனர். அத்துடன் 73 ஆசிரியர்கள் கடமைபுரிகின்றனர். மேலும் இப்பாடசாலையின் வளக்குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog