Breaking

LightBlog

Wednesday, 30 November 2016

முழு இலங்கையும் புலிகளின் கட்டுப்பாட்டில்...கம்மன்பில.


வடக்கு, கிழக்கு மாகாணங்களை கைப்பற்றுவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நோக்கமாக இருந்தது. ஆனால், இன்று முழு இலங்கையையும் விடுதலைப் புலிகள் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். யார் இந்த கருணா அம்மான்? அன்று அங்குலிமாலா, கெப்பட்டிபொல போன்றவர்களைப் போன்று 

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தவர். பிழையான வழியிலிருந்து சரியான வழிக்கு வந்தவர். கிழக்கு மாகாணத்தை கைப்பற்றிக் கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரயத்தனத்தில் கருணா அம்மானும், பிள்ளையானும் முக்கிய பங்காற்றினர். இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தின் பங்காளர்களில் ஒருவராக கருணா இருக்கின்றார்.

இன்றைய அரசாங்கத்தில் அவர் நல்லிணக்க ஆலோசகராகவும், குறைந்தபட்சம் வெளிவிவகார அமைச்சருக்கு நெருக்கமான ருத்ரகுமாரன், சுரேன் சுரேந்திரனைப் போன்றவர்களைப் போல வரப்பிரசாதங்களை அனுபவித்திருக்கலாம். தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து

கொண்டதாலேயே கருணா அம்மான் இன்று சிறைவைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் விசேட அதிரடிப் படையின் முன்னாள் பிரதானியும் வாகன முறைகேட்டுப் பாவனை குற்றத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் மற்றும் இதர விடயங்களில் ஈடுபட்டு பாரதூர தண்டனைகளை பெறுவதற்கு ஈடானவர்களுக்கு வழக்கு தொடராமல் விடுதலை செய்வதற்காக சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில்தான் விசேட அதிரடிப் படையின் முன்னார் பிரதானியும், கருணா அம்மானும் கைது செய்யப்பட்டார்” – என்றார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog