By-Ansar Cassim
சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட நெயினாகாடு ஹிஜ்ரா வட்டை பாம் வீதியினை புனரமைக்கும் ஆரம்பப் பணி கடந்த சனிக்கிழமை நேற்று (09) ஆரம்பிக்கப்பட்டது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூரின் முயற்சியினால் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் இவ்வீதி புனரமைக்கப்படவுள்ளது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர் திருமதி எம்.எஸ். றிப்னாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் ஏ.சலீம், நீர்ப்பாசனத் திணைக்கள ஊழியர்கள், விவசாயிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், நிறுகைத் தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.
இவ்வீதி புனரமைப்பின் மூலம் விவசாயிகள், சிறுகைத்தொழிலாளர்கள், பொதுமக்கள், உட்பட பலர் நன்மையடையவுள்ளனர்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment