(எம்.எப்.எம்.பஸீர்)
சீனி கொள்கலனுக்குள் வைத்து நாட்டுக்குள் கடத்தப்பட்ட சுமார் 31 கிலோ எடை உடைய 45 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட கொக்கைன் போதைப் பொருள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய புள்ளி ஒருவரைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொக்கைன் போதைப் பொருளை நாட்டுக்கு தருவித்ததாக நம்பப்படும் நப ரைத் தேடியே இவ்விசாரணைகள் இடம்பெறுவதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் பேலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களனி, பெத்தியாகொட பகுதியில் உள்ள சுரவீர எனும் களஞ்சியசா லைக்குள் இருந்தே பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் 31 கிலோ 844 கிராம் எடையுடைய கொக்கைன் போதைப் பொருளினை மீட்டிருந்தனர். அதன் சந் தைப் பெறுமதி 47 கோடியே 76 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கொக்கைன் போதைப் பொருளினைக் கைப்பற்றிய போதும் நேற்று வரை அதனு டன் தொடர்புடைய எந்தவொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் டி சில்வாவின் நேரடி கட்டுப்பாட்டில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment