(ரெ.கிருஷ்ணகாந்)
கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்கள் சிலவற்றில் நாளை சனிக்கிழமை 12 மணித்தியாலங்கள் நீர்வெட்டினை மேற்கொள்ளவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
தெஹிவளை, கல்கிஸை, இரத்மலானை, கோட்டே, கடுவலை மாநகரசபைக்குட்ட பிரதேசம், மஹரகம, பொரலஸ்கமுவ, கொடிகாவத்தை, கொலன்னாவை மற்றும் முல்லேரியா ஆகிய நகரசபைக்குட்பட்ட பிரதேசம் ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் விநியோக தடை ஏற்படும்.
நாளை காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீhவழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கான மின்சார விநியோக கட்டமைப்பில் திருத்தப் பணிகள் இடம்பெறவுளள்தால் இந்த நீர் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment